Sunday, June 29, 2014

விபத்திற்கான குற்றப் பொறுப்பினை மொத்தமாக விபத்துக்கு காரணமான பொருளின் உரிமையாளர் தொடர்புடையவர்கள் என எல்லார் மேலும் சுமத்தும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. அரசு வாகனம் மோதி விபத்திற்குண்டானால்  சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? காவல் துறை வாகனம் விபத்தினை ஏற்படுத்தினால் முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்ட முடியுமா? காவல் துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும். குற்றஞ்சாட்டக் கூடிய அளவிற்கு கவனக் குறைவுடன் ஒரு நபர் இருந்தாரா என்பதை விசாரித்து அதன் பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் பட்டாசு வெடிவிபத்து ஒன்றில் குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரின் குற்றப் பொறுப்பு என்ன? அல்லது சட்ட ரீதியான கடமைதான் என்ன? அரசுகட்டிடத்தில் ஏதாவது நடந்தால் முதல்வர் கவர்னர் வரை பொறுப்பாக்குவார்களா? சென்னை கட்டிடம் இடிந்த வழக்கிலும் யாரையாவது கைது செய்து இறந்து போனவர்களுக்கு பணம் கொடுத்து வழக்கை முடிப்பதற்கு பதில் உண்மையைக் கண்டறிய காவல்துறை பொறுப்புடன் செயல் பட வேண்டும். குற்றமுறு கவனக் குறைவு (Criminal negligence ) யாரிடம் இருந்தது என்பது தான் இந்த வழக்குகளில் முக்கியமானது.